புது படத்திற்கு தயாரான அமுல் பேபி…!கலர் பியூல் போட்டோக்களை வெளியிட்ட ஹன்சிகா!!!

0

பல மொழி படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹன்சிகா மோட்வானி. தற்போது ஹன்சிகாவின் மஹா படம் கூடிய விரைவில் ஓடிடி தளத்தில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்  அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு அடுத்த படத்திற்கு தயாராவதாக கேப்சன் ஒன்றையும் பதிவிட்டு உள்ளார்.மேலும் அந்த படத்தின் டைட்டிலையும் தெரிவித்து உள்ளார்.

ஹிந்தி திரையுலகில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழை பொறுத்தவரை விஜய் , தனுஷ் ,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் அவருடைய நடிப்பில் உருவான மஹா என்ற திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

 

எனவே சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்து உள்ள இந்த படத்தின்  டீசர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவரின் அடுத்த படம் தெலுங்கில் உருவாக உள்ளது. இதை பற்றி ஹன்சிகா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதாவது பல கலர் பியூல் புகைப்படங்களை வெளியிட்டு  புது படத்திற்கு தயாராவதாக கேப்சன் ஒன்றையும் பதிவிட்டு உள்ளார். மேலும் அந்த படத்தின் பெயர் ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ என்பதையும் வெளியிட்டு உள்ளார். இது அவரின் ரசிகர்கள் மத்தியில் குதுகலத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here