அரசு பெண் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்., உங்களுக்காகவே மாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்திய சத்தீஸ்கர் அரசு!!

0
அரசு பெண் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்., உங்களுக்காகவே மாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்திய சத்தீஸ்கர் அரசு!!
மத்திய மற்றும் மாநில அரசுகள் குழந்தைகளின் ஆரம்ப கல்வி, ஊட்டச்சத்து ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் மாநிலம் தோறும் அங்கன்வாடிகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் அரசு பெண் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது நடப்பு கல்வி ஆண்டில் மாநிலம் தோறும் 1500 அங்கன்வாடி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் அரசு பணி செல்லும் பெண்களின் 6 மாத குழந்தைகள் முதல் 6 வயது குழந்தைகள் வரை இதில் பராமரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களுக்கு தேவையான சத்துள்ள உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இருந்தால் அதை சிறு வயதிலேயே கண்டுபிடித்து அதை சரி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும், தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here