ஆறுதல் வெற்றி பெறுமா சென்னை அணி – கோல்கட்டா அணியுடன் ஐ .பி.எல்., போட்டியில் மோதல்!!

0

இன்றைய ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த தோனி தலைமையிலான சென்னை ஆறுதல் வெற்றி பெறுமா?? என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அதே நேரம் மார்கனின் கோல்கட்டா அணி எளிதாக விட்டுதர வாய்ப்பில்லை.

அசத்துவாரா தோனி 

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும், 13வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இன்று துபாயில் நடக்கவுள்ள 49வது லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதவுள்ளன.

மூன்று முறை சாம்பியன் ஆன தோனி தலைமையிலான சென்னை அணி, இம்முறை லீக் சுற்றுடன் திரும்புகிறது. கடந்த முறை அரை சதம் அடித்த ருதுராஜ்க்கு டு பிளசி, ராயுடு கை கொடுக்க வேண்டும். கேப்டன் தோனி சென்னை அணி ரசிகர்களை பேட்டிங் மூலம் மகிழ்ச்சிப்படுத்தலாம். ஆல் ரவுண்டர் சாம் கர்ரான், ஜடேஜா அதிரடி காட்டினால் நல்லது. சான்ட்னர் , தாகிர் சுழல் ஜாலத்திற்கு தயார். பிளே- ஆப் சுற்றுக்குள் மும்பை மட்டும் நுழைந்து விட்டது. மற்ற 3 இடத்திற்கு பெங்களூரு, டில்லி உள்ளிட்ட அணிகள் போராடுகின்றன. மீதமுள்ள இரண்டு போட்டியில் சாதித்தால் கோல்கட்டா அணிக்கும் அடுத்த சுற்று வாய்ப்புள்ளது.

கேப்டன் மார்கன், சுப்மன் கில் மட்டுமே நம்பிக்கை தருகின்றனர். ராணா, தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் விளையாட வேண்டும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் விக்கெட் வீழ்த்த திணறுகிறார். வருண் அணிக்கு பலம் சேர்கிறார். இதே தொடரில், ஏற்கனவே இரு அணிகள் மோதிய போட்டியில் கோல்கட்டா வென்றது. ஒட்டு மொத்தமாக இதுவரையிலான மோதலில், சென்னை 13, கோல்கட்டா 8 போட்டியிலும் வென்றுள்ளது.

உத்தேச லெவன் அணி:

சென்னை – ருதுராஜ், டு பிளசி, ராயுடு, தோனி (கேப்டன் ), ஜெகதீசன், ஜடேஜா, சாம் கர்ரான், சான்ட்னர், சகார், மோனு குமார், தாகிர்.

கோல்கட்டா – சுப்மன் கில், ராணா, திரிபாதி, தினேஷ் கார்த்திக், மார்கன் (கேப்டன் ), நரைன், கம்மின்ஸ், நாகர்கோட்டி, பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசாத் கிருஷ்ணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here