இளம் வழக்கறிஞர்களுக்கு இனி மாதம் ரூ.3,000 – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!!

0

சட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் நம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி

அரசு கல்லூரியில் சட்ட படிப்பினை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு இவர்கள் தேசிய அளவிளான வழக்கறிஞர்கள் குழுமத்தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால் தான் பார் கவுன்சிலின் சான்று கிடைக்கும்.பிறகு இளநிலை வழக்கறிஞர்கள் யாரவது ஒரு மூத்த வழக்கறிஞரிடம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பயிற்சி செய்ய வேண்டும்.

சட்ட படிப்பு படிக்கும் மாணவர்கள் படித்து முடித்து விட்டு வழக்கறிஞர் ஆகவே மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகிறது .இதில் ஏழ்மையான குடும்பத்தில் சேர்ந்தவர்கள் நிலைமை மிகவும் சிரமம்.எனவே சில மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக வேறு மாற்று தொழில் செய்யும் நிலமை உண்டாகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

lawyers

இந்நிலையை எல்லாம் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்,வறுமையான நிலையில் உள்ள வழக்கறிகர்களுக்கு உதவும் வகையில்,சட்ட படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் வீதம் 2ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்னும் திட்டத்தை 2.7.2020.அன்று அறிவித்தார். இது தொடர்பான நிகழ்ச்சி தலைமை செயல்களத்தில் இன்று காலை நடைபெற்றது. அப்போது அரசு கல்லூரியில் சட்ட படிப்பு முடித்த மாணவர்களுக்கு மற்றும் 30 வயதிற்குள் உள்ள வழக்கறிஞர்களுக்கு மட்டும் உதவித் தொகை கொடுக்கப்படும் என்று உத்தரவிட பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here