டென்னிஸில் தெறிக்கவிட்ட இந்திய வீராங்கனை.., தடாலடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!

0
டென்னிஸில் தெறிக்கவிட்ட இந்திய வீராங்கனை.., தடாலடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!
டென்னிஸில் தெறிக்கவிட்ட இந்திய வீராங்கனை.., தடாலடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!

சென்னையில் நடந்து வரும் சர்வதேச பெண்கள் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை கனடாவின் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

சென்னை ஓபன் டென்னிஸ்!!

சர்வதேச பெண்களுக்கான மகளிர் ஓபன் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ் டி டி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கி, ரஷ்யாவின் கிராசேவா, போலந்தின் மேக்டா லினட் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கர்மான் கவுர் தண்டி, பிரான்ஸ் வீராங்கனை சோல் ப்ராக்கெட்டை எதிர்கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற கடுமையான ஆட்டத்தில் 6 – 4, 4 – 6, 3 – 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2 வது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதே போன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த யூஜினி புச்சார்ட், சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜோனே ஜுகாரை எதிர்கொண்டார். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கனடாவின் வீராங்கனை 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் ரெபேக்கா மரினோ, 149-ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனா பிளின்கோவாவை எதிர்கொண்டார். இதில் மரினோ 7-5, 6-2 என்ற நேர் செட்டில் பிளின்கோவாவை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தின் மூலம் கர்மான் கவுர் தண்டி, யூஜெனி புச்சார்ட், மரினோ ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here