‘கொஞ்சமாச்சும் வாழ்க்கையில திருந்தி வாழு’ – பிரேம்ஜி பற்றிய உண்மையை உடைத்த வெங்கட் பிரபு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு தனது தம்பி பிரேம்ஜிக்கு வார்னிங்க் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜூ வூட்ல பார்ட்டி:

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்களை பொழுது போக்கும் விதமாக பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்களிடம் பிரபலமாக இருந்த குக் வித் கோமாளி சீசன் 3 முடிந்ததால் ரசிகர்கள் பலர் வருத்தமடைந்து வந்தனர். அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக ராஜூ வூட்ல பார்ட்டி என்ற ரியாலிட்டி ஷோ இருந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிக்பாஸ் ராஜு. அதுமட்டுமின்றி இந்த ஷோவில் காமெடி நட்சத்திரமான ராமர், சுனிதா, மதுரை முத்து ஆகியோர் கலந்து கொண்டு விருந்தினர்களை கலாய்த்து வருகிறார்கள். இந்நிலையில் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு தனது தம்பி பிரேம்ஜி க்கு வார்னிங்க் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, வைபவ், விஜயலட்சுமி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் வெங்கட் பிரபு பல சுவாரசியம் நிறைந்த கதைகளை கூறினார். அந்த நேரத்தில் ஆங்கர் பிரியங்கா வெங்கட் பிரபுவிடம், பொய் சொல்லி பார்ட்டிக்கு போய் வீட்டில் மாட்டி இருக்கிறீர்களா?? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர் நாங்க எல்லாரும் பொய் சொல்லிட்டு போயிருக்கோம், ஆன கடைசில வீட்டில் மாட்டிக்குவோம். அதற்கு காரணம் வேற யாரும் இல்ல பிரேம்ஜி தான். பார்ட்டி கொண்டாடும் போது குரூப் போட்டோ எடுத்து தன்னோட இணையத்தில் போட்டு வீட்டில் மாட்டி விட்ருவான். இதனால் தங்களின் கேங்கில் உள்ள அனைவரும் பிரச்சினையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக நடந்து வருவது. இந்நிலையில் வார்னிங் கொடுக்கும் விதமாக, “டேய் பிரேம் கொஞ்சமாவது வாழ்க்கையிலே திருந்துடா” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here