சென்னை கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே புதிய மெட்ரோ ரயில்

0
சென்னை கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில்

தமிழ்நாட்டில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கமாக கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மீனாட்சி கல்லூரி முதல் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி பைப்பாஸ் வரை 18 நிறுத்தங்களுடன் கூடிய மெட்ரோ ரயில் வழித்தடம் ரூ. 2,306 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட வழித்தடங்கள்

சென்னையில் முதல் முறையாக வண்ணாரப்பேட்டை- கோயம்பேடு/ விமான நிலையம், சென்ட்ரல்- பரங்கிமலை உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுகிறது. மேலும் இரண்டாம் கட்டமாக மாதவரம்-சிறுசேரி உள்பட 3 வழித்தடங்களில் 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஜப்பான் இண்டர்நே‌ஷனல் கார்ப்பரேசன் ஏஜென்சி இந்த இரண்டாம் கட்ட வழித்தடப் பணிகளுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. இதற்கான பணிகள் வரும் ஜுன் மாதம் முதல் தொடங்கவுள்ளன.

மூன்றாம் கட்ட வழித்தடமானது கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மீனாட்சி கல்லூரி முதல் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி பைப்பாஸ் வரை 26 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது. இதற்கு ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதிஉதவி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here