சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நடந்த காதல் திருமணம்., சீர்வரிசை கொடுத்த அமைச்சர்!!

0
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நடந்த காதல் திருமணம்., சீர்வரிசை கொடுத்த அமைச்சர்!!
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நடந்த காதல் திருமணம்., சீர்வரிசை கொடுத்த அமைச்சர்!!

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த ஜோடிக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று திருமணம் நடந்து உள்ளது.

திருமணம்:

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் – தீபா இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், இன்று( அக்.,28) இந்த ஜோடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திருமணம் நடந்துள்ளது. அதாவது மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், 42 வயதான மகேந்திரனும், 36 வயதான தீபாவும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு மருத்துவர்களால் அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக முழுமையாக சிகிச்சையில் இருந்து இருவரும் மீண்டு காப்பகத்தில் தொழில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து மகேந்திரன் தங்களது லவ் ஸ்டோரி குறித்து கூறியது என்னவென்றால், மன அழுத்தம் காரணமாக மருத்துவமனைக்கு வந்த போது முதலில் சிகிச்சையை ஏற்க மறுத்ததாகவும் பின்னர் சிகிச்சை பெற்று கொண்டதாகவும் கூறினார். இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள ‘டே கேர் சென்டரில்’ வேலைக்கு சென்ற போது, அங்கு சிகிச்சைக்காக வந்த தீபாவை அதிகம் கேர் பண்ணினாராம். பின்னர் தீபாவின் மீது ஏற்பட்ட காதலை அவரிடம் வெளி காட்டியதாகவும், சில காலம் கழித்து தன்னுடைய காதலை தீபா ஏற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

என்ன சார் விஜய் இப்படி இருக்காரு.., வம்சியிடம் புலம்பி தள்ளிய பிரகாஷ் ராஜ்.., உண்மையை உடைத்த இயக்குனர்!!

மேலும் தீபாவை முதன் முதலில் பார்க்கும் போது, தன் அம்மாவை கண் முன் பார்ப்பது போல இருந்தது என்றும் கூறினார். இவர்களின் காதலுக்கு முன்னதாக மனநல காப்பகம் மறுப்பு தெரிவித்து இருந்தாலும், இப்பொது அதை ஏற்று கொண்டு இருவீட்டார் சம்மதத்தில் மகேந்திரன்-தீபா ஜோடியின் திருமணம் காப்பகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் இன்று கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களுக்கு வார்டு மேற்பார்வையாளர் பணிக்கான நியமன ஆணைகளை சீர் வரிசையாக வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here