தொடர்ந்து 3வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

0

சென்னையில் இந்த வாரத்தில் தொடர்ந்து 3வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வரலாறு காணாத உயர்வால் தங்க நகை வாங்குவதை நீண்ட நாட்களாக தள்ளிப்போட்டிருந்த மக்கள் இன்று நகைக்கடை பக்கம் செல்லத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் வியாபாரம் அதிகரித்துளளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகரித்த தங்கத்தின் விலை, தற்போது வழங்கப்பட்டு உள்ள அதிகப்படியான தளர்வுகள் காரணமாக சற்று குறையத் தொடங்கி உள்ளது. முதலீடு அதிகரித்ததன் விளைவாக தங்கத்திற்கான தேவையும் பல மடங்கு உயர்ந்ததால், நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்த நேரம் கூட விலை மட்டும் உயர்ந்து கொண்டே சென்றது. ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வரத்து அதிகரித்துளளதால் விலை சரிந்து வருகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் 39 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் தற்போது அதற்கு கீழ் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிய துர்கா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 ரூபாய் குறைந்து ரூ.4,853க்கும், ஒரு சவரன் ரூ.8 சரிந்து ரூ.38,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை பெரிதும் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 65 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,000க்கு விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here