
தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு கணித தேர்வை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் பட்டதாரி கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏனென்றால் 10ம் வகுப்பு கணித தேர்வு ஏப்ரல் 1ம் தேதி நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளியும், 31ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதுபோன்ற தொடர் விடுமுறை வருவதால் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே கணித தேர்வை மட்டும் மாற்றி வைக்க வேண்டும் என ஆசிரியர் பட்டதாரி கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.