
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப விழா வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நாளை 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீப விழா தொடங்கவுள்ளது.

மேலும் 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் 26 ஆம் தேதி மகா தீப கொண்டாட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில் பக்தர்கள் மலை ஏறுவதற்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இன்று திருவண்ணாமலையில் ஆய்வு கூட்டம் நடந்துள்ளது. அதில் கார்த்திகை கொண்டாட்டத்தின் போது மலை ஏற 2500 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.