பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., பாடப்புத்தகத்தில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!

0
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., பாடப்புத்தகத்தில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!
நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இப்போது 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில் 202425-ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது. மேலும் இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பள்ளிகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பாடப் புத்தகங்களில் பல மாற்றங்கள் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி அம் மாநிலத்தில் மொத்தம் 144 பாட புத்தகங்கள் எழுத்தாளர் ரோகித் சக்கர தீர்த்தா தலைமையில் திருத்தப்பட உள்ளது. அதன்படி 1 முதல் 10ம் வகுப்பு வரை கன்னடம் 1 பாட புத்தகம் திருத்தப்பட உள்ளது. அதே போன்று 9 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கன்னடம் 3 பாட புத்தகம் திருத்தப்பட உள்ளது. மேலும் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகங்களும் திருத்தப்பட உள்ளது. இதற்கு தற்போது அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here