விஜய்யை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.., கோபப்பட்ட எஸ்.ஏ. சி. சந்திரசேகர் அதிரடி பேட்டி!!

0
விஜய்யை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.., கோபப்பட்ட எஸ்.ஏ. சி. சந்திரசேகர் அதிரடி பேட்டி!!
விஜய்யை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.., கோபப்பட்ட எஸ்.ஏ. சி. சந்திரசேகர் அதிரடி பேட்டி!!

நடிகர் விஜயின் எதிர்காலம் குறித்து அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகரிடம் கேட்டபோது கோபத்தில் அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய்:

நடிகர் விஜய் திரைத்துறை வாழ்க்கையை கையில் எடுத்து இந்த அளவுக்கு மிகப்பெரிய உயரத்தை தொட்டு உள்ளார் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். விஜய் நடிக்க ஆசைப்பட்ட போது அவருக்காக ஒவ்வொரு படத்தையும் செதுக்கி பக்காவாக பிளான் போட்டு உச்ச நட்சத்திரமாக நிற்க வைத்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகர். இப்படி இருக்கையில் அப்பாவும் மகனுக்கும் இடையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருவது அரசியல் தான்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது SAC க்கு அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஆசை இருந்தபோது, விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார். இதனால் தான் விஜய்க்கும் அவருடைய அப்பாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி விஜய் அரசியலில் இறங்க சந்திரசேகர் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால் தளபதிக்கு உடன்பாடு இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்த கதாபாத்திரத்துக்கு மீனா ஆண் வேடம் போட்டாரா? இத்தன நாள் இந்த உண்மைய மறச்சுட்டீங்களே!!

இந்த நிலையில் சந்திரசேகர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டல நாக நதி ஆற்றுப்பாலம் அருகே உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். செய்தியாளர் ஒருவர் விஜயின் எதிர்காலம் பற்றி கேள்வி கேட்க, அதற்கு SAC, விஜயின் எதிர்காலத்தைப் பற்றி என்னிடம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள், அதை விஜய் இடம் கேளுங்கள் என்று கூறினார். அதன் பின்னர் அரசியல் இறங்கிய நடிகர்கள் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்று கேட்டதற்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். தற்போது விஜய் குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here