ஆதார் எண்ணை இன்னும் இணைக்கலயா? அப்போ உங்களுக்கு இந்த உதவித்தொகை கட்! அரசு உறுதி!!

0
ஆதார் எண்ணை இன்னும் இணைக்கலயா? அப்போ உங்களுக்கு இந்த உதவித்தொகை கட்! அரசு உறுதி!!
ஆதார் எண்ணை இன்னும் இணைக்கலயா? அப்போ உங்களுக்கு இந்த உதவித்தொகை கட்! அரசு உறுதி!!

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள், தங்கள் ஆதார் எண்ணை இன்னும் இணைக்காமல் இருந்து வருகின்றனர். விரைவில் இதை முடிக்காதவர்களின் உதவித்தொகையை கட் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மத்திய மற்றும் மாநில அரசுகள் மோசடிகளை தடுப்பதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகின்றது . அதில் ஒன்று தான் ஆதார் இணைப்பு. அந்த வகையில் இந்திய குடிமகன்கள் அனைவரும் பான் கார்டு, ரேஷன் கார்டு, பேங்க் அக்கௌன்ட் உள்ளிட்டவற்றை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என அறிவித்தனர். இதை பொதுமக்களும் பின்பற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – வெளியான அதிரடி அறிவிப்பு!!

இதனை தொடர்ந்து இப்போது விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வருடா வருடம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் அதிக மோசடி நடைபெறுவதால் அண்மையில் கூட மத்திய அரசு போலியான ஆவணங்களை கொடுத்த 67% விவசாயிகளை இந்த திட்டத்திலிருந்து நீக்கியாக தகவல் வெளியானது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, இப்போது இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண்ணை இதுவரை 9 லட்சம் விவசாயிகள் இணைக்காமல் உள்ளனர். இவர்கள் இணைத்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here