ஐசிசி T20 தரவரிசை வெளியீடு: முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ்…, மற்ற இந்திய வீரர்களின் இடம்??

0
ஐசிசி T20 தரவரிசை வெளியீடு: முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ்..., மற்ற இந்திய வீரர்களின் இடம்??
ஐசிசி T20 தரவரிசை வெளியீடு: முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ்..., மற்ற இந்திய வீரர்களின் இடம்??

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம், தொடர்ந்து முதலிடத்தை சூர்யகுமார் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ஐசிசி தரவரிசை:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் கடந்த வாரம் 859 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். இவர், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், சதம் அடித்ததன் மூலம் (111*) அதிகபட்சமாக 217.65 ஸ்ட்ரைக் ரேட்டுகளும், மற்றோரு போட்டியில் 13 ரன்களும் எடுத்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், சூர்யகுமார் யாதவ் 859 புள்ளிகளிலிருந்து 890 புள்ளியாக உயர்ந்து, தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவரை போல, நியூசிலாந்தின் டெவோன் கான்வே இந்தியாவுக்கு எதிராக 25 மற்றும் 59 ரன்கள் எடுத்ததன் மூலம், தரவரிசையில் 788 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார். இந்த தரவரிசையில், 2வது மற்றும் 4வது இடத்தில், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் உள்ளனர்.

சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் மறுக்கப்பட்டதுக்கு இது தான் காரணம்…, ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!

இதில், விராட் கோஹ்லி (650), கே எல் ராகுல் (582) மற்றும் ரோஹித் சர்மா (579) புள்ளிகளுடன் 13, 19 மற்றும் 21 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே போல, பவுலர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் புவனேஷ்வர் (647), அர்ஷ்தீப் சிங் (616) மற்றும் அஸ்வின் (606) புள்ளிகளுடன் 11, 21 மற்றும் 22 ஆகிய இடங்களில் உள்ளனர். இந்த தரவரிசையில், இலங்கையின் வனிந்து ஹசரங்கா 704 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில், 194 புள்ளிகளுடன் ஹர்திக் பாண்டியா 3வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here