தமிழக அரசின் இந்த ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரந்தரம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக அரசின் இந்த ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரந்தரம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழக அரசின் இந்த ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரந்தரம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் அவ்வப்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனாலும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் செவிலியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக தகுந்த அறிக்கையை தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். அதன்படி நேற்று (ஜூன் 5) தமிழக அரசு சார்பில் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ச்சே.., என்ன ஒரு ட்விஸ்ட்.., அப்பத்தாவை பகடை காயாக்கும் குணசேகரன்.., அம்பலமாகும் ஜீவனந்தத்தின் உண்மை முகம்!!

அதில் “மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் ஒப்பந்த செவிலியர்கள் ரூ.18,000/- ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கும் அரசு செவிலியர்களுக்கும் பணி மற்றும் பொறுப்பு ரீதியாக முற்றிலும் வேறுபாடு உள்ளது. அதேபோல் 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை 4,012 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டில் கூடுதலாக 1,283 பேரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.” என அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here