இனி மதியம் சிக்கன் கிரேவி, காலை பொங்கல், அவித்த முட்டை, …, இவங்களுக்காக அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் நியூஸ்!!

0
இனி மதியம் சிக்கன் கிரேவி, காலை பொங்கல், அவித்த முட்டை, ..., இவங்களுக்காக அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் நியூஸ்!!
இனி மதியம் சிக்கன் கிரேவி, காலை பொங்கல், அவித்த முட்டை, ..., இவங்களுக்காக அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் நியூஸ்!!

தமிழக அரசானது, இல்லத்தரசிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு ஊக்கத் தொகை, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூறாவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மேலும் சில சிறப்பு சலுகைகளையும் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, தமிழக சிறை வாசிகளுக்கான உணவு முறையில் மாற்றம் செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்பு அறிவித்திருந்தார். இதன்படி, காலை பொங்கல், அவித்த முட்டை, மதியம் சிக்கன் கிரேவி, மாலை சூடான சுண்டல், சப்பாத்தி, சென்னா, டீ வழங்கப்பட உள்ளது. இதற்காக, நாள் ஒன்றுக்கு 96 ரூபாயில் இருந்து 135 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரந்தரம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!

மேலும், காலை உணவு முறையாக ஞாயிற்றுக்கிழமை கோதுமை உப்புமா, திங்கள்கிழமை சாம்பர், பொங்கல், செவ்வாய்கிழமை ராகி உப்புமா, உருளைக்கிழங்கு மசாலா, புதன்கிழமை தக்காளி சாதம் முட்டையும், வியாழன் எலுமிச்சை சாதம் வெள்ளிக்கிழமையில் இட்லி சாம்பார் சனிக்கிழமைக்களில் புதினா சாதம் வழங்கப்படும். இதனை தொடர்ந்து, வாரத்தின் 2 நாட்களுக்கு அசைவ உணவுகள் வழங்கப்படும் என புதிய உணவு முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உணவுத் திட்டத்தை நேற்று முதல் புழல் மத்திய சிறையில் அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here