10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவையுங்கள் – ஆசிரியர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

0

தமிழகத்தில் விரைவில் தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்கள் தள்ளிவைக்கக்கோரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

பள்ளிப் பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என தமிழக அரசு கால அட்டவணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில், மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அது சம்மந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு முடிவுகளை எடுக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ள நிலையில், தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆசிரியர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்வில் 9,79,000 பத்தாம் வகுப்பு மாணவர்களும், 8,41,000 பதினோராம் வகுப்பு மாணவர்களும் மற்றும் 36,089 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த தேர்வுப்பணியில் 3,87,623 ஆசிரியர்களும், 22,43,000 ஆசிரியர் இல்லாத ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கால் விடுதியில் புத்தகத்தை விட்டுச் சென்ற மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது கடினம் என்பதால், தேர்வுக்கு முன் 15 நாட்கள் வகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here