உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி எதிரொலி: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Captaincy, #Kohli ஹஷ்டேக்குகள்!!!

0

இங்கிலாந்து சௌதாம்ப்டானில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது நாம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ட்விட்டரில் #Captaincy, #Kohli ஹஷ்டேக்குகள் ட்ரெண்டாகி விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து  விவாதம் நடைபெற்றுவருகிறது.

இந்திய அணி கிட்டத்தட்ட 7 முறை ஐசிசி தொடர்களில் இறுதி போட்டி அல்லது அரையிறுதிப் போட்டிவரை சென்று கோப்பையை நழுவ விட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பாக்கப்பட்டது இந்த  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர். ஆனால் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.

இது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என தங்கள் மனதை தேற்றிக்கொண்டனர். இந்நிலையில் விராட் கோலி தலைமை பண்பு ட்விட்டரில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ட்விட்டரில் #captaincy, #Kohli என்ற ஹஷ்டேக்குகள் ட்ரெண்டாகி, பல ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here