போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பெண்.., போலீசார் எடுத்த கடுமையான நடவடிக்கை!!!

0
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பெண்.., போலீசார் எடுத்த கடுமையான நடவடிக்கை!!!
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பெண்.., போலீசார் எடுத்த கடுமையான நடவடிக்கை!!!

தமிழ்நாட்டில் பெருகி வரும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க போலீசார் புதிய நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார்.

வாகன சோதனை

மக்களின் எளிய பயணங்களுக்காக பேருந்து, ரயில் என பல்வேறு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் தனிப்பட்ட வாகன பயணங்களையே விரும்புகின்றனர். இதனால் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வாகனங்களும் அதிகரித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவ்வாறு சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அவசர பயணங்களில் அரசு குறிப்பிட்டுள்ள போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்றனர். இதனால் வருடந்தோறும் சாலை விபத்து எண்ணிக்கை பெருகி கொண்டே செல்கிறது. இதையடுத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம், வாகன பறிமுதல் போன்ற கடும் நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கேஸ், ஃபைன், ஜெயில்.., எல்லாம் இருக்கு., வாரிசு பட  பாணியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை!!

இந்நிலையில் திருநெல்வேலியில் போலீசார் ரோந்து பணியில் உள்ள போது பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் செல்போனில் உரையாடியபடி பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை மடக்கிய போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலக காவலரிடம் ஒப்படைத்து பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here