காதலர் தினத்தை முன்னிட்டு நூதனமான திட்டம்.., பிரபல பூங்காவில் நடக்க இருக்கும் சம்பவம்!!

0
காதலர் தினத்தை முன்னிட்டு நூதனமான திட்டம்.., பிரபல பூங்காவில் நடக்க இருக்கும் சம்பவம்!!
காதலர் தினத்தை முன்னிட்டு நூதனமான திட்டம்.., பிரபல பூங்காவில் நடக்க இருக்கும் சம்பவம்!!

வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல பூங்கா ஒன்று ஒரு வித்தியாசமான திட்டத்தை அறிமுக படுத்தியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

காதலர் தினம்:

இந்த உலகம் நிற்காமல் சுற்றி கொண்டு இருப்பதற்கு ஒரே காரணம் காதல் தான். இந்த காதல் மனிதனுக்கு மட்டும் உகந்தது அல்ல. மற்ற வாய் இல்லா ஜீவராசிகளும் இதில் அடங்கும். அப்படி தம்மிடம் இருக்கும் அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக தான் காதலர் தினத்தை பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடி வருகிறோம். அந்த நாளில் புது காதலர்கள் மகிழ்ச்சியுடன் சேர்வது மட்டுமின்றி, பிரிந்த காதலர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பிரபல பூங்கா ஒன்று ஒரு வித்தியாசமான திட்டத்தை அறிமுக படுத்தியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கனடா நாட்டின் டொரோண்டோ விலங்கியல் பூங்காவில் முன்னாள் காதலி அல்லது காதலன் மீதி இருக்கும் கோபத்தை வெளிக்காட்டுவதற்கு 2000 ரூபாய் செலவில் ஒரு கரப்பான் பூச்சியை தத்தெடுத்து அதற்கு உங்கள் எக்ஸ் பெயர்களை வைத்துக் கொள்ளலாம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பெண்.., போலீசார் எடுத்த கடுமையான நடவடிக்கை!!!

உங்கள் எக்ஸ் மீது இருக்கும் கோபத்தை எல்லாம் அதன் மேல் காட்டிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த கரப்பான் பூச்சிக்கு உங்கள் ஆபீஸில் வேலை பார்க்கும் மேனேஜர், உங்களுடன் வேலை பார்ப்பவர்களுக்கோ மற்றும் உங்கள் உறவினர்கள் என பிடிக்காத நபர்கள் இருந்தால் அவர்கள் பெயரையும் வைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் உங்கள் கவலை மற்றும் கோபத்தை போக்கிக் கொள்ளும் விதமாக இந்த கரப்பான் பூச்சி திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here