உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு…, டாப் 10 யில் மூன்று இடத்தை தக்கவைத்த இந்திய வீரர்கள்!!

0
உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு..., டாப் 10 யில் மூன்று இடத்தை தக்கவைத்த இந்திய வீரர்கள்!!
உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு..., டாப் 10 யில் மூன்று இடத்தை தக்கவைத்த இந்திய வீரர்கள்!!

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசையில், மூன்று பிரிவுகளின் கீழ் டாப் 10ல் ஓர் இடத்தை இந்திய வீரர்கள் பிடித்திருந்தாலும் சற்று சறுக்கல் சந்தித்து உள்ளனர்.

பேட்மிண்டன் தரவரிசை:

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF), சர்வதேச அளவில் பேட்மிண்டனில் சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வீரர்கள், சமீபத்தில் எந்த ஒரு பெரிய அளவிலான கோப்பையையும் வெல்லாததால் சற்று சறுக்கலை சந்தித்து உள்ளனர். அதாவது, ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யா சென் 6 இடங்கள் பின்தங்கி 25 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும், H S பிரணாய் மற்றும் ஸ்ரீகாந்த் கிடாம்பி 9 மற்றும் 20 வது இடத்தை தக்க வைத்துள்ளனர். மகளிருக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பி வி சிந்து சமீபத்தில், தகுதி சுற்றோடு வெளியேறிதால், 9 வது இடத்தை பெற்றுள்ளனர். ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் முன்னணி ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி 6வது இடத்தை தக்க வைத்துள்ளனர்.

மார்க்ஆண்டனி படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்து..,காயமடைந்த ஸ்டண்ட் மேன்..,50000 நிதியுதவி கொடுத்த விஷால்!!

மகளிருக்கான இரட்டையர் பிரிவில், ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி கடந்த இங்கிலாந்து ஓபனில் அரையிறுதி போட்டி வரை முன்னேறி இருந்ததால், தரவரிசையில், 18 வது இடத்தை பிடித்துள்ளனர். தற்போது, சுவிட்சர்லாந்தில் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்கள், பதக்கங்கள் வெல்லும் பட்சத்தில் உலக தரவரிசையில் முன்னேறுவார்கள் என என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here