டாப் 10 இடத்தை நழுவ விட்ட பி வி சிந்து…, பேட்மிண்டன் தரவரிசையில் ஏமாற்றம்!!

0
டாப் 10 இடத்தை நழுவ விட்ட பி வி சிந்து..., பேட்மிண்டன் தரவரிசையில் ஏமாற்றம்!!
டாப் 10 இடத்தை நழுவ விட்ட பி வி சிந்து..., பேட்மிண்டன் தரவரிசையில் ஏமாற்றம்!!

உலக பேட்மிண்டன் தரவரிசையில், இந்தியாவின் பி வி சிந்து கடந்த 2016 ஆண்டுக்கு பிறகு தற்போது சரிவை சந்தித்துள்ளார்.

பேட்மிண்டன் தரவரிசை:

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பானது (BWF), சர்வதேச அளவிலான பேட்மிண்டன் தொடர்களில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஏற்ப, தரவரிசை பட்டியலை, வாரந்தோறும் புதுப்பித்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் முடிவடைந்ததை அடுத்து, இந்த தரவரிசையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில், ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், 70926 புள்ளிகளுடன் 6 வது இடத்தை தக்க வைத்துள்ளனர். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி வி சிந்து, இங்கிலாந்து ஓபன், ஸ்விஸ் ஓபன் என இந்த வருட தொடக்கத்தில் இருந்து அனைத்து தொடர்களிலும் தகுதி சுற்றுடன் வெளியேறியதால், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசையில் சரிவை சந்தித்து உள்ளார்.

TNPSC குரூப் 4 முறைகேடு விவகாரம்: தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின் படி ஆலோசனை கூட்டம்., முக்கிய தகவல்கள் வெளிவருமா?

அதாவது, கடந்த 2016ம் ஆண்டு முதல், டாப் 10ல் இடம் பெற்ற பி வி சிந்து, தற்போது 11 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த தரவரிசையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் H S பிரணாய் மற்றும் ஸ்ரீகாந்த் கிடாம்பி 9 மற்றும் 21 வது இடத்திலும், மகளிருக்கான இரட்டையர் பிரிவில், ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் 18 வது இடத்திலும் தங்களது இடத்தை தக்க வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here