பும்ராவுக்கு மாற்று வீரர் தயார்?? எதிரணிக்கு சவால் விடும் ஒருவர் அவர் தான்…, எச்சரிக்கை விட்ட கவாஸ்கர்!!

0

டி20 உலக கோப்பை நெருங்கி வரும் நிலையில், இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு பதில். மாற்று வீரராக ஒருவரை சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

பும்ராவுக்கு மாற்று வீரர்:

ஐசிசி சார்பாக நடத்தப்படும் டி20 உலக கோப்பையின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் வரும் 16ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக, சர்வதேச அணிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்த வகையில், இந்திய அணியும், ஆஸ்திரேலியாவில் தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த அணியில், காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா விலகியது அனைவரும் அறிந்த ஒன்றே.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால், இவரது இடத்தை நிரப்பும் வகையில் தகுந்த மாற்று வீரரை பிசிசிஐ இன்னும் தேர்வு செய்யாமல் திணறி வருகிறது. இவருக்கு பதிலாக, முகமது ஷமி, தீபக் சாஹர் மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்களை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதில், தீபக் சாஹர் முதுகு வலி காரணத்தால் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகி, இந்திய மருத்துவ குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதனால், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இவர்கள் இருவருக்கிடையே போட்டி நிலவியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், முகமது சிராஜ் சமீபத்திய போட்டிகளில் எதிரணிக்கு பெரும் சவால் விடும் வகையில், நெருக்கடி கொடுத்து இருந்தார். இதனால், இவரையே பும்ராவுக்கு மாற்று வீரராக அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, முகமது ஷமி, தற்போது தான் கொரோனா தொற்றில் இருந்து, மீண்டுள்ளதால், அவரது பார்ம் எப்படி இருக்கும் என்பது கூறுவது கடினம் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here