ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்க இருக்கும் பும்ரா?? தேர்வு குழுவின் அதிரடி முடிவு!!

0
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்க இருக்கும் பும்ரா?? தேர்வு குழுவின் அதிரடி முடிவு!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்க இருக்கும் பும்ரா?? தேர்வு குழுவின் அதிரடி முடிவு!!

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் தொடர்களுக்கு எதிரான இந்திய அணியில், வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இல்லாதது குறித்து தேர்வு குழு தலைவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பும்ரா குறித்து தேர்வு குழு:

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை விளையாடி முடித்த பிறகு, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக நவம்பர் 18ம் தேதி முதல் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாட உள்ளது. இதனை தொடர்ந்து, பங்களாதேஷுக்கு எதிராக, டிசம்பர் 4ம் தேதி முதல் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களை விளையாட இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொடருக்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று இரவு அறிவித்திருந்தது. இதில், ஜடேஜா பங்களாதேஷுக்கு எதிராக மட்டும், உடல் நிலையை பொறுத்து அணியில் இணைவார் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், பும்ரா இந்திய அணிக்கு திரும்புவது குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

CSA T20 லீக் 2022: 57 பந்தில் 162 ரன்கள் அடித்து சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் வீரர்!!

இந்நிலையில், பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா, டி20 உலக கோப்பை தொடருக்காக காயத்தில் இருந்து மீண்ட உடன் பும்ராவை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட வைத்தோம். ஆனால், இவருக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமாகாதால் உலக கோப்பைக்கு முன்பே விலகி இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று கூறியுள்ளார். இதன் விளைவால், முழுவதுமாக பும்ரா குணமடைந்த பிறகு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அணிக்கு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here