வித்தியாசமான ஈஸியான டேஸ்டி பிரட் அல்வா… உடனே செஞ்சு அசத்துங்க!!!

0
வித்தியாசமான ஈஸியான டேஸ்டி பிரட் அல்வா... உடனே செஞ்சு அசத்துங்க!!!
வித்தியாசமான ஈஸியான டேஸ்டி பிரட் அல்வா... உடனே செஞ்சு அசத்துங்க!!!

இனிப்பு வகைகளில் அனைவரும் விரும்பும் ஒரு இனிப்பு பொருள் அல்வா. இதில் நிறைய வகை இருக்கிறது. அதாவது கோதுமை, கேரட், பீட்ரூட் போன்ற அல்வா வகைகள் உள்ளது. இந்நிலையில் தற்போது அனைவரின் விருப்பம் உணவாக இருப்பது பிரட் அல்வா. அதன் செய்முறையும் ஈசி மற்றும் உபயோகிக்கும் பொருட்களும் கம்மி தான். இந்நிலையில் இந்த பதிவில் பிரட் அல்வா செய்முறையை காணலாம்.

தேவையான பொருட்கள்:

பிரட் – 7

நெய் – தேவையான அளவு

பால் – 2 கப்

முந்திரி – 1/4 கப்

சீனி – 1/2 கப்

வித்தியாசமான ஈஸியான டேஸ்டி பிரட் அல்வா... உடனே செஞ்சு அசத்துங்க!!!
வித்தியாசமான ஈஸியான டேஸ்டி பிரட் அல்வா… உடனே செஞ்சு அசத்துங்க!!!

செய்முறை

முதலில் பிரட்களின் ஓரங்களை வெட்டி, அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி போட்டு வறுத்தெடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த நெய்யில் நறுக்கி வைத்து உள்ள பிரட் துண்டுகளை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொண்டு அதில் பாலை சேர்த்து பிரட் துண்டுகளை வேக வைத்து கொள்ள வேண்டும்.

வித்தியாசமான ஈஸியான டேஸ்டி பிரட் அல்வா... உடனே செஞ்சு அசத்துங்க!!!
வித்தியாசமான ஈஸியான டேஸ்டி பிரட் அல்வா… உடனே செஞ்சு அசத்துங்க!!!

பிரட் துண்டுகள் வெந்து வரும் வேளையில் வறுத்து வைத்து உள்ள முந்தரியில் சிலவற்றை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அதன் பின்னர் வெந்து வரும் பிரட்டில் அரைத்த முந்திரி கலவை, சீனி சேர்த்து நெய் பிரிந்து வரும் அளவுக்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும். அதன் பிறகு அதில் வறுத்து வைத்து உள்ள முந்திரியை சேர்த்து கொண்டு அடுப்பை அணைத்து கொள்ள வேண்டும். தற்போது சுவையான மணமான பிரட் அல்வா ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here