ஓலா ஸ்கூட்டர் விற்பனையில் மாபெரும் சாதனை – இரண்டு நாட்களில் 1100 கோடியை தாண்டிய பிரமிப்பு!

0
ஓலா ஸ்கூட்டர் விற்பனையில் மாபெரும் சாதனை - இரண்டு நாட்களில் 1100 கோடியை தாண்டிய பிரமிப்பு!
ஓலா ஸ்கூட்டர் விற்பனையில் மாபெரும் சாதனை - இரண்டு நாட்களில் 1100 கோடியை தாண்டிய பிரமிப்பு!

ஓலா நிறுவனத்தின் புதிய திட்டமான எஸ்1, எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்களின் ஆன்லைன் விற்பனை இரண்டு நாட்களில் 1100 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

புதிய சாதனை:

ஓலா நிறுவனம் அதன் சிறப்பான அறிவிப்புகளால் அடிக்கடி அதன் பயனர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் இதன் முக்கிய திட்டமான ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் அக்டோபரில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் தெரிவித்தது. இந்த விற்பனை ஆன்லைனில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை அதன் வாடிக்கையாளர்கள் வரவேற்றனர்.

ஓலா ஸ்கூட்டர் விற்பனையில் மாபெரும் சாதனை - இரண்டு நாட்களில் 1100 கோடியை தாண்டிய பிரமிப்பு!
ஓலா ஸ்கூட்டர் விற்பனையில் மாபெரும் சாதனை – இரண்டு நாட்களில் 1100 கோடியை தாண்டிய பிரமிப்பு!

இதில் எஸ் 1 ரக ஸ்கூட்டர் 1,00,00 ரூபாய் எனவும், எஸ்1 ப்ரோ 1,30,000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த மின்சார ஸ்கூட்டர்களின் ஆன்லைன் விற்பனை இரண்டு நாட்களில் அளப்பரிய சாதனையை செய்துள்ளது. அதாவது 499 ரூபாய் செலுத்தி இணையவழி முன்பதிவு செய்தோர் குறைந்தது இருபதாயிரம் ரூபாய் செலுத்தி மின்சார ஸ்கூட்டரை பெறலாம் என்ற நிறுவனத்தின் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு நாட்களில் ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனை ஆயிரத்து நூறு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஓலா ஸ்கூட்டர் விற்பனையில் மாபெரும் சாதனை - இரண்டு நாட்களில் 1100 கோடியை தாண்டிய பிரமிப்பு!
ஓலா ஸ்கூட்டர் விற்பனையில் மாபெரும் சாதனை – இரண்டு நாட்களில் 1100 கோடியை தாண்டிய பிரமிப்பு!

இணையவழியில் ஸ்கூட்டர் வாங்கியோருக்கு அக்டோபரில் டெலிவரி செய்யப்பட உள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக நவம்பர் முதல் நாளில் ஆன்லைன் விற்பனை நடைபெற உள்ளதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆன்லைன் வழி விற்பனையில் முதல் நாள் மட்டும் 600 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக இந்த நிறுவனம் பெருமை தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களில் 1100 கோடியை தாண்டிய இந்த நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை மிகப்பெரிய இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனால், இதன் மீது மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here