பிரபல மூத்த பாலிவுட் நடிகர் திடீர் மறைவு – சோகத்தில் படுத்த படுக்கையான அவரது மனைவி!!

0

இந்தி திரையுலகில் முக்கிய நடிகராக திகழ்ந்து வந்த மூத்த குணசித்திர நடிகர் ரமேஷ் தியோ உடல்நலக்குறைவால் காலமான செய்தி பாலிவுட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் மறைவு:

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரமேஷ் தியா. அமிதாப்பச்சன், தர்மேந்திரா மற்றும் ராஜேஷ் கண்ணா போன்ற பல பாலிவுட் முன்னணி நடிகருடன் நடித்துள்ள இவர், பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் பாத்திரத்திலும் நடித்துள்ளார். இதுவரை இவர் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல், இவர் பல மராத்தி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவருடன் சேர்த்து அவரது மனைவி சீமா தியோவும் சினிமாவில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

93 வயதான ரமேஷ் தியோ, உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்று காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு பாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தற்போது இவரது மனைவி சீமாவும், நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here