சூத்திரர்களை ஜாதி பெயர் வைத்து அழைத்தால் அவமதிப்பா?? சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்பி!!

0

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பிரக்யா சிங் அடிக்கடி ஏதாவது கூறி சர்ச்சையில் சிக்குவார். தற்போது ஜாதி பெயரை குறிப்பிட்டு அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரக்யா சிங்:

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங், இதற்கு முன் அவர் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். மேலும் மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் இவரும் ஒருவர். தற்போது அவர் மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோரில் நடந்த ஒரு நிகழ்வில், இந்து மத நூல்களில் உள்ள நான்கு வர்ணங்கள் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) குறித்து பேசியபோது அவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிர் அவர், “ஒரு சத்திரியரை சத்திரியர் என்று அழைத்தால் அவர் தவறாக நினைப்பதில்லை; ஒரு பிராமணரை பிராமணர் என்று அழைத்தால் அவர் தவறாக நினைப்பதில்லை; ஒரு வைசியரை வைசியர் என்று அழைத்தால் அவரும் தவறாக நினைப்பதில்லை; ஆனால் ஒரு சூத்திரரை சூத்திரர் என்று அழைத்தால் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். சூத்திரர்கள் தங்களை சாதி பெயரைக் கொண்டு அழைத்தால் அவமதிப்பாக நினைக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு போதிய அறிவில்லை”. இவ்வாறாக அவர் கூறினார்.

கட்டிடம் கட்ட அனுமதி பெற ‘இது’ கட்டாயம்!!

மேலும் அவர் மேற்குவங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டா அவர்களின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து பேசினார். அதில் பழைய ஆட்சி முடிவுக்கு வர நேரம் வந்து விட்டது. அடுத்து பஜக ஆட்சி அமையவுள்ளது. இதனால் அவர்கள் பெரும் வெறுப்பில் உள்ளதால் இவ்வாறு செய்கின்றனர் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here