#BJPBetrayingTNPeople…இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்!!!

0

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசின் நடவடிக்கையே காரணம் என்று ட்விட்டரில் #BJPBetrayingTNPeople என்ற ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நாட்டின் மிக முக்கிய பிரச்சினை தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பதுதான். கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வு என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். தடுப்பூசியை செலுத்த மத்திய அரசிடம் சரியான உத்தி இல்லை என்று இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் குற்றஞ்சாட்டினர்.

 

இந்நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு மக்கள் தொகையின் அடைப்படையில் தடுப்பூசிகளை வழங்காமல், பாரபட்சமான முறையில் தடுப்பூசி விநியோகம் செய்ததே இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக குஜராத்துக்கு, தமிழகத்தை விட அதிகளவில் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜராத்துக்கு, தமிழகத்தை விட அதிகளவில் தடுப்பூசிகள் ஒதுக்கியுள்ளதை கண்டித்து ட்விட்டர் #BJPBetrayingTNPeople என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் மத்திய அரசுக்கு எதிராக #BJPBetrayingTNPeople என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here