12 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தடுப்பூசி இயக்கம்..!!!

0

12 அல்லது அதற்கு குறைந்த வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு கொரோனா தடுப்பூசி இயக்கம் இன்று முதல் உத்தரபிரதேசத்தின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் தொடங்கப்பட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் மூன்று வகை கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவற்றில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. மூன்றாவது தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் V. ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியை இந்தியாவில் செலுத்த ஏப்ரல் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.தற்போது நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் ஒவ்வொரு மாநில அரசு பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தற்போது உத்தரபிரதேசத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா மாநகராட்சி அதிகாரிகளும் 12 அல்லது அதற்கு குறைந்த வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இக்குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அனைவரும் கோவின் (CoWin) போர்ட்டல் மூலம் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் தடுப்பூசி செலுத்த வரும்போது 12 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் என்பதற்கான ஆதாரத்துடன் ஒரு அடையாள ஆவணத்தை சமர்ப்பித்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here