
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 ல் இருந்து குறைவான வாக்குகளை பெற்றிருந்த கானா பாலா நேற்று வெளியேறியிருந்தார். இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் 14 போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் சவாலான 3 டாஸ்க்குகளை கொடுத்துள்ளார். மேலும் இந்த டாஸ்குகளில் தோற்கும் 3 நபர்கள் பிக் பாஸை விட்டு வெளியேற வேண்டும். அவர்களுக்கு பதிலாக வெளியில் இருந்து 3 வைல்டு கார்டு என்ட்ரி பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார்கள் என கூறப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் இந்த டாஸ்குகளில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பிக் பாஸை விட்டு 3 நபர்கள் வெளியேற்றப்படுவார்களா? அப்படி வெளியேறும் பட்சத்தில் வைல்டு கார்டின் மூலம் யார் யார் என்ட்ரி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படி பிக் பாஸ் கொடுத்திருக்கும் இந்த சவாலான டாஸ்கால் BB போட்டியாளர்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.