போச்சு.. வீடே இரண்டாக போகுது.. பிக் பாஸ் சீசன் 6-இல் அதிரடியாக ஒப்பந்தமான சர்ச்சை நடிகை!

0
போச்சு.. வீடே இரண்டாக போகுது.. பிக் பாஸ் சீசன் 6-இல் அதிரடியாக ஒப்பந்தமான சர்ச்சை நடிகை!
போச்சு.. வீடே இரண்டாக போகுது.. பிக் பாஸ் சீசன் 6-இல் அதிரடியாக ஒப்பந்தமான சர்ச்சை நடிகை!

விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சர்ச்சை நாயகி ஒருவர் களமிறங்க உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6:

சின்னத்திரை ரசிகர்கள் பலரும் தற்போது பார்க்க காத்திருக்கும் ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ் தான். முதல் சீசனில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது 5 சீசன்கள் வரை டெலிகாஸ்ட் செய்யப்பட்டு விட்டது. குறிப்பாக இதன் அடுத்த சீசனுக்காக போட்டியாளர்களை ஒப்பந்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பெயர் பட்டியல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளது.

சமீபத்தில் ராஜா ராணி தொடரில் இருந்து VJ அர்ச்சனா விலகினார். மேலும் இந்த விலகல் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் என பேச்சுக்கள் எழுந்தது. தற்போது அர்ச்சனாவை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா சீரியல் நடித்து பிரபலமான ஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சத்யா தொடர் விரைவில் முடிய உள்ளதாகவும் கூறபடுகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஆயிஷா தன் சீரியல் இயக்குனர் மீது சர்ச்சை புகார் ஒன்றை வைத்து வீடியோ வெளியிட்டார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தால் என்னாகுமோ என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here