மாயாவிற்கு ஆதரவாக செயல்படும் கமல்.. வச்சு செய்த விஜய் டிவி நட்சத்திரங்கள்.. வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கிய நாளில் இருந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை (ஜனவரி 14) பிரம்மாண்டமாக கிராண்ட் பினாலே நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசன் குறித்து விஜய் டிவி நட்சத்திரங்களான புகழ் மற்றும் குரேஷி  பேசி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குரேஷி கமலஹாசனை போல் மிமிக்ரி செய்கிறார். அப்பொழுது புகழ் கேள்வி கேட்கிறார், அவர் கேட்கும் கேள்வி அனைத்திற்கும் மாயா மாயா என்று பெயர் பொருத்தி கமலஹாசன் குரலில் பதில் அளித்தார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த சீசனின் உண்மையான பிரதிபலிப்பு காட்டப்பட்டுள்ளதாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here