![இந்த 11,366 அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம்? உறுதியான உத்தரவாதம் அளித்த கர்நாடகா!!! இந்த 11,366 அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம்? உறுதியான உத்தரவாதம் அளித்த கர்நாடகா!!!](https://enewz.in/wp-content/uploads/2024/01/FEA-4-2-2-768x576.jpg)
நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) ரத்து செய்து தேசிய ஓய்வூதிய திட்டத்தை (NPS) மத்திய அரசு அமல்படுத்தி இருந்தது. அதில் நிலையான ஓய்வூதியம் கிடைக்காததால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல மாநில அரசு ஊழியர் சங்கங்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் OPS-ஐ மீண்டும் அமல்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள 11,366 அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சி.எஸ்.ஷடாக்ஷரி தெரிவித்துள்ளார். இதற்கான உறுதியான உத்தரவாதம் மாநில அரசிடம் பெற பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக ஆசிரியர்களே…, அரசு பள்ளியில் பணி நியமனம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!