தமிழ் சினிமாவில் காமெடி துணை நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் டேனியல். அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் தான் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த ஷோவின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இந்நிலையில் நடிகர் டேனியலை ஒரு கும்பல் நூதனமாக பண மோசடி செய்துள்ளது. அதாவது, நடிகர் டேனியல் வீடு வாடகைக்கு வேண்டும் என்று ஆப் மூலம் தேடி வந்துள்ளார்.

ஜீவானந்தத்தை கைது செய்யும் போலீசார்., குணசேகரனை பழி தீர்க்க துடிக்கும் ஜனனி.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!
இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு நிறுவனம் 15 லட்சம் கொடுத்தால் வீடு பார்த்து தருவதாகவும், லீசு முடிந்தவுடன் 15 லட்சம் திருப்பி கொடுக்கப்படும் என்று தெரிவித்தால், இவரும் சற்றும் யோசிக்காமல் பணத்தை கொடுத்துவிட்டு அவர்கள் சொன்ன வீட்டிற்கு குடியேறியுள்ளார். ஆனால் வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்ததால் ஹவுஸ் ஓனர் வீட்டை காலி செய்துள்ளார். அப்போது தான் தாம் ஏமாந்து விட்டோம் என்று டேனியலுக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.