“என்னைய அடிடா”., மணிகண்டாவுடன் அடிதடியில் இறங்கிய தனலட்சுமி – கலவர பூமியான பிக்பாஸ் வீடு!!

0
"என்னைய அடிடா"., மணிகண்டாவுடன் அடிதடியில் இறங்கிய தனலட்சுமி - கலவர பூமியான பிக்பாஸ் வீடு!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணிகண்டா மற்றும் தனலட்சுமி இடையேயான அடிதடி பிரச்சனை, இன்றைய ப்ரோமோவாக வெளிவந்துள்ளது.

இன்றைய ப்ரோமோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 ல் இன்றைய ப்ரோமோ அதிரடியாக வெளிவந்துள்ளது. இதில், கொடுக்கப்பட்ட டாஸ்கின் படி ஹவுஸ் மேட்டுகள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இதில் தனலட்சுமி வழக்கம் போல் யாருக்கும் இடம் விடாமல், அவர் மட்டுமே நின்று கொடுக்கப்பட்ட கார்டை எடுத்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், கடுப்பான மணிகண்டா தனலட்சுமியை இழுத்து கீழே தள்ளிவிட்டு, பொருட்களை எடுக்க ஆரம்பித்தார். இதனால் ஆவேசமான தனலட்சுமி மணிகண்டாவை வெளுத்து வாங்கினார். அதுமட்டுமில்லாமல், நீ என்னையவே இழுத்து வெளியே போடுவியா? நான் உன் கடைக்குள்ள நுழைஞ்சு எல்லாத்தையும் வெளியே எடுத்து போடுறேன் என தனலட்சுமி அதிரடியாக களத்தில் இறங்கினார்.

இதனால், மணிகண்டாவும் பதிலுக்கு அவரை கண்டபடி பேசிவிட்டார். தனலட்சுமி என்னை அடிடா, நீ என்னை அடிச்சிட்டு சும்மா இருந்துடுவியா? என கொந்தளிக்கிறார். பத்ரகாளியான தனலட்சுமியை அசீம் குறுக்கிட்டு சமாதானப்படுத்துகிறார். தொடர்ந்து ஹவுஸ் மேட்கள் அனைவரும் சேர்ந்து இருவரையும் சமாதானப்படுத்துகின்றனர். இந்த பிரச்சனையால் நள்ளிரவில் பிக் பாஸ் வீடு, கலவர பூமியாக மாறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here