நடிகர் விஜயால் ஏற்பட்ட பெரும் நஷ்டம்.., தலைவர் ஆசையால் ஏற்பட்ட விபரீதம்., என்ன தெரியுமா??

0
நடிகர் விஜயால் ஏற்பட்ட பெரும் நஷ்டம்.., தலைவர் ஆசையால் ஏற்பட்ட விபரீதம்., என்ன தெரியுமா??
தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் இப்போது கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் கட்சி ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் வரிசையில் விஜய்யும் இணைந்துள்ளார். அந்த வகையில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனது அரசியல் ஆசையைப் பற்றி கூறிய இவர் கட்சி பெயரையும் வெளியிட்டார். அதன்படி தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்து அதற்கு தானே தலைவராக செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். இந்த விஷயம் ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு மாறாக இனி சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் விஜய் சினிமாவை விட்டு விலகினால் கோலிவுட் வட்டாரம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திப்பதாக கூறப்படுகிறது. அதாவது நடிகர் விஜய் ஆண்டுக்கு எப்படியாவது இரு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் இரண்டு படங்களுமே வசூலை வாரி குவிப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட வெளியான லியோ திரைப்படம் 148 கோடி வசூலை அள்ளியது. இதுவரைக்கும் எந்த படமும் இப்படி ஒரு வசூலை எட்டியது கிடையாது. ஆனால் அவர் சினிமாவை விட்டு விலகினால் வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here