தமிழக பட்ஜெட் 2024: அரசு பள்ளிகள் & விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…, வெளியான தகவல்!! 

0
தமிழக பட்ஜெட் 2024: அரசு பள்ளிகள் & விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..., வெளியான தகவல்!! 
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடப்பு ஆண்டு நடைபெறுவதையொட்டி, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த தமிழக பட்ஜெட் தாக்கலில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குதல், ஊக்கத்தொகை அளித்தல் உள்ளிவைகளுக்கும் நிதி ஒதுக்கப்படும் என பரவலான தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தமிழக பட்ஜெட் தாக்கலில் தான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here