இப்போ எப்படி இருக்கு? பாரதிராஜாவை அவரது வீட்டுக்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

0
இப்போ எப்படி இருக்கு? பாரதிராஜாவை அவரது வீட்டுக்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் நேற்று வீடு திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவை, முதல்வர் ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

முதல்வர் நலம் விசாரிப்பு:

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரமாக திகழ்ந்த  பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோலிவுட்டில் டாப் ரேஞ்சில் இருக்கும் பல நடிகர்களுக்கு வாழ்வளித்த இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு ரசிகர்கள் துடிதுடித்து போயினர். நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த இவர், உடல் நலம் தேறி நேற்று மாலை தனது வீடு திரும்பினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவர் மருத்துவமனையில் இருந்த போது ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜான பின் நேரில் சென்று நலம் விசாரித்திருப்பது திரை உலகினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here