கண்ணம்மாவுக்கு ஹேமா தன் குழந்தை என்று தெரிய வருகிறது. இதனால் அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பாரதி கண்ணம்மா:
இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் கண்ணம்மா ஹேமாவை தன்னுடன் கூட்டி செல்வேன் என்று சௌதர்யா வீட்டில் சண்டை போடுகிறார். ஆனால் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் பாரதிகாகவாது உன் முடிவை மாற்றி கொள் என்று சொல்கிறார்.
ஆனால் கண்ணம்மா இதையெல்லாம் கேட்டபாடில்லை. கடைசியாக சௌந்தர்யா கண்ணம்மா காலிலேயே விழுந்து ஒரு 4 நாள் டைம் கொடு. நானே லட்சுமியை உன்னிடம் வந்து விடுகிறேன் என்று சொல்கிறார். இதனால் கண்ணம்மா அரைமனத்துடன் அங்கிருந்து செல்கிறார்.
பின்னர் வெண்பா விவாகரத்து பத்திரத்தை கண்ணம்மா கொண்டு வருவார் என்று காத்து கொண்டுள்ளார். கண்ணம்மா வேண்டும் என்றே மாத்தி மாத்தி வெண்பாவை வம்பு இழுக்க குழம்பி போய் வெண்பா அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடுகிறார்.
அதை தொடர்ந்து கண்ணம்மா லட்சுமிக்கு ஹேமா தன் குழந்தை என்று தெரிந்ததால் ஸ்வீட் வாங்கி வருகிறார். லட்சுமிக்கு கண்ணம்மா இவ்வளவு சந்தோசமாக இருப்பது பார்த்து மிக ஆச்சரியப்படுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்