இயக்குனர் செல்வராகவனுடன் இணையும் தனுஷ் – அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

0

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் நானே வருவேன் திரைப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 16ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான அப்டேட் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். தற்போது இவர் திருச்சிற்றம்பலம்,  மாறன், ஹாலிவுட்டில்  தி கிரே மேன் மற்றும் பாலிவுட்டில் அந்தராங்கி ரே என்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.  இந்த நிலையில், தமிழில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, இரண்டாம் உலகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்கவில்லை. இந்த நிலையில், வருகிற அக்டோபர் 16ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here