அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலம் – தமிழகம் தொடர்ந்து முதலிடம்!!

0

இந்தியா டுடே சார்பில் வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தரவரிசையில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த மாநிலம்:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு, நிவர் புயல் முன்னெச்சரிக்கை என அரசின் சிறந்த நடவடிக்கைகள் காரணமாக மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகத் துறையினரிடம் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா டுடே சாரபில் நடத்தப்பட்ட சிறந்த மாநிலங்களுக்கான கருத்து கணிப்பு ஆய்வறிக்கை முடிவுகளில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,263 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 1,235 புள்ளிகளுடன் இமாச்சல பிரதேசம் 2வது இடத்தையும் பிடித்துள்ளன. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள விழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த பட்டியலில் 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3வது முறையாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 4, 5 மற்றும் 6வது இடத்தை பிடித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here