மீண்டும் தீவிர கட்டுப்பாடுகள் – இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு ஆகஸ்ட் 16 வரை பெங்களூரில் நீட்டிப்பு!!

0
அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையால் மீண்டும் கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் 144 தடையுத்தரவு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் ஏற்பட்ட கொரோனா தொற்று அடுதடுத்த அலையாக தொடர்ந்து உலக மக்களை பாடாய் படுத்திவருகிறது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் பணக்கார நாடுகள் கூட இத்தொற்றில் இருந்து முழுதாக வெளிவந்த பாடில்லை.

இந்நிலையில் இரண்டாம் அலை 2021 ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் அதிகரித்து தற்போது ஓரளவுக்கு குறைந்து உள்ளது. இந்நிலையில் உலகின் பல நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை பரவ ஆரம்பித்துள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும் இந்தியாவிலும் கொரோனா மூன்றாம் அலை பரவல் கிட்டத்தட்ட தலை தூக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
தற்போது சுதாரித்து கொண்ட மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்குள் நுழைய கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும் கர்நாடகா மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here