அட பாவமே., பீஸ்ட் படத்துகா இந்த நிலைமை.. குறைவான வரவேற்ப்பால் திரையரங்குகளில் இருந்து நீக்கம்!

0
அட பாவமே., பீஸ்ட் படத்துகா இந்த நிலைமை.. குறைவான வரவேற்ப்பால் திரையரங்குகளில் இருந்து நீக்கம்!

ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (13-04-2022) வெளியான படம் பீஸ்ட். நடிகர் விஜய்யின் 65வது படமான பீஸ்ட், நெல்சன் திலீப்குமார் திரைப்பயணத்தில் டாக்டர், KoKo படங்களுக்கு அடுத்து மூன்றாவது படமாகும். ஆனால் பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டுள்ளதா என்றால் அது கேள்விக்குறியே.

ஏனென்றால் படத்தில் பல இடங்களில் லாஜிக் இடிப்பதாகவும் வலுவான திரைக்கதை இல்லை என்றும் விஜய் ரசிகர்களே புலம்பி வருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் திரையிடப்பட்ட ஒரே நாளிலேயே பீஸ்ட் திரைப்படம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு உள்ள சம்பவம் படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது குறித்து பீஸ்ட் படத்தை பிரான்ஸ் நாட்டில் வெளியிட்ட விநியோகஸ்தர்கள் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், பீஸ்ட் பிரிமியர் காட்சியில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அடுத்தடுத்த காட்சிகள் திரையிடப்பட்டால் அது வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால் பீஸ்ட் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறப்படுள்ளது. மேலும் இவ்வாறு முதல் நாளில் படத்தை நீக்குவது இது முதல் தடவை இல்லை. இதற்கு முன்பு தானா சேர்ந்த கூட்டம், மிஸ்டர் லோக்கல், கோச்சடையான் போன்ற படங்களும் முதல் நாளிலேயே நீக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here