விஜய் மாஸ் பண்ணிட்டாரு.. ஆனா நெல்சன் சொதப்பிட்டாரே.., பீஸ்ட் முழு திரைவிமர்சனம் இதோ!

0
விஜய் மாஸ் பண்ணிட்டாரு.. ஆனா நெல்சன் சொதப்பிட்டாரே.., பீஸ்ட் முழு திரைவிமர்சனம் இதோ!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (13-04-2022) திரையரங்குகளில் வெளியான படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே போன்ற முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார். குறிப்பாக மாஸ்டர் போன்ற பிளாக்பஸ்டர் படத்திற்கு அடுத்து விஜய் நடித்துள்ள படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பீஸ்டிற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

பீஸ்ட் திரைவிமர்சனம்:

நமது இந்திய நாட்டின் ராணுவத்தின் உளவாளியாக பணிபுரியும் விஜய் வேறு ஒரு நாட்டில் உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்யும் பொழுது பரிதாபமாக ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. அதனால் மனம் வெறுத்த விஜய் தனது உளவாளி வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் இருக்கிறார். ஆனால் ஒரு நாள் எதிர்பாராத விதமாக முக்கிய மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

அந்த மாலில் சிக்கிக்கொள்ளும் விஜய், அங்குள்ள மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின் மீதி கதை. டாக்டர் படத்தில் வெற்றியடைந்த இயக்குனர் நெல்சனின் காமெடி யுத்தி பீஸ்ட் படத்தில் அவருக்கு கைகொடுக்கவில்லை. பீஸ்ட் முதல் பாதி ஓரளவுக்கு எதிர்பார்ப்புடன் உள்ளது என்றால், இரண்டாம் பாதியில் விஜய் மொத்த படத்தையும் தன் தோளில் சுமக்கிறார். சாதாரண காட்சியையும் விறுவிறுப்பாகியது என்றால் அது அனிருத்தின் BGM ஒன்று தான்.

கதை, ஒளிப்பதிவு தாண்டி தளபதியின் On screen presence புல்லரிக்க வைக்கிறது. பீஸ்ட் படத்தில் பல முக்கிய காட்சிகளில் லாஜிக் இல்லை. அனிருத், விஜய் போட்டிருக்கும் உழைப்பை கொஞ்சம் நெல்சன் போட்டிருக்கலாம் என்பதே ரசிகர்களின் குமுறலாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகள் நன்கு தீப்பிடித்தாலும் மொத்தத்தில் பீஸ்ட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here