‘பிபி ஜோடிகள்’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சி தற்போது இறுதி சுற்றை நெருங்கிய நிலையில் வெற்றியாளர்களின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிபி ஜோடிகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை தொகுப்பாக வைத்து பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி ஆரம்பித்தது. ஆரம்பித்த சில நாட்களிலேயே இந்த நிகழ்ச்சி சூப்பர் ஹிட். அதிலும் முக்கியமாக சொல்ல வேண்டுமானால் போட்டியாளர்கள் வாராவாரம் பின்னி பெடலெடுத்து வருகின்றனர்.

அறந்தாங்கி நிஷா, கேபி, சம்யுக்தா போன்றோர் தனது நடன திறமையை வேறு லெவெலில் காட்டி வருகின்றனர். வனிதாவை வைத்து பிபி ஜோடிகளில் பிரச்சனை வர நிகழ்ச்சி மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அனிதா-ஷாரிக், நிஷா-தாடி பாலாஜி, சம்யுக்தா-ரமேஷ், கேபி- ஆஜித் போன்றோர் இறுதி சுற்றில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்குமே உள்ளது.

அனிதா-ஷாரிக் ஜோடியை பற்றி சொல்லவே வேண்டாம். மேலும் கேபி-ஆஜித் இளம் ஜோடிகள் என்பதால் அனல்பறக்கும் பர்பாமன்ஸ் தான். எப்படியும் இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் தான் என ஆடியன்ஸ் கணித்து வைத்திருக்க அதன்படியே அனிதா-ஷாரிக் தான் வெற்றிபெற்றுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here