ராஜா ராணி சீரியல் நடிகையின் வீட்டிற்கு திடீரென விசிட் அடித்த பிக் பாஸ் பிரபலம் – அதுவும் இதற்காகவா??

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அனிதா சம்பத் தற்போது ராஜா ராணி சீரியல் நடிகையின் வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிதா சம்பத்

தொகுப்பாளினியாக பணியாற்றியதால் மூலம் பிரபலமானவர் தான் அனிதா சம்பத். தொடர்ந்து தனது குரல்வளத்தின் மூலம் அனைவரின் நெஞ்சங்களை கொள்ளைகொண்டார். சிறு வயதில் இருந்தே அவருக்கு தமிழ் மேல் அவ்வளவு பற்றாம். பல பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த திறமைகளை அடிப்படையாக வைத்து தான் அவருக்கு சன் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு தான் அவருக்கு பிரச்சனையே ஆரம்பித்தது.

அவரின் செய்கை பலரையும் கடுப்பாக்கியது. எதாவது ஒரு பிரச்சனை என்றால் அதனை தொணதொணவென பேசி கொண்டே இருப்பது தான் எரிச்சலடைய செய்தது. சோம் அனிதா இடையே இப்படி தான் பெரிய பிளவு ஏற்பட்டது. அதன் பிறகு அனிதா பக்கமே சோம் திரும்பவே இல்லை.

வீட்டில் அனைவரிடமும் சண்டை தான் போட்டுக்கொண்டிருந்தார் அனிதா. இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளானார். தற்போது யூடுப் சேனல், டான்ஸ் என பிசியாக இருந்து வருகிறார். இந்த பிஸியான காலகட்டத்தில் தனது தோழியான ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று அவரது குழந்தையை பார்த்து விட்டு வந்திருக்கிறார். ராஜா ராணி சீரியலில் ஸ்ரீதேவி வில்லியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here