முரட்டுத்தனமாக எகிறிய பார்பிகியூ நேஷன் லாபம்.. ஒரே காலாண்டில் ரூ.200 கோடிக்கு மேல் வருவாய்!!!

0

பார்பிகியூ நேஷன் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் (Barbeque Nation Hospitality Ltd) நிறுவனம் சென்ற காலாண்டிற்கான நிகர லாபத்தை வெளியிட்டு உள்ளது. அந்த தரவுகளின்படி சென்ற காலாண்டில் அந்நிறுவனம் ரூ.6 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.226 என கணகிடப்பட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பார்பிகியூ நேஷன், இது மும்பையில் 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு உணவகம் ஆகும். பின்னர் மெல்ல மெல்ல விரிவடைந்து தற்போது இந்தியாவில் பல பகுதிகளில் இந்த உணவகத்தின் 130க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்தியா மட்டும்மில்லாது மலேஷியா, ஓமன் போன்ற நாடுகளிலும் இந்த பார்பிகியூ நேஷன் உணவகத்தின் கிளைகள் உள்ளன.

 

மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 6 கோடி ரூபாயாகும். மேலும் பார்பிகியூ நேஷனின் வருவாய் சென்ற காலாண்டில் 19% உயர்ந்து  190 கோடியிலிருந்து 226 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த உணவு நிறுவனம் இந்த ஆண்டு மேலும் 20 புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து நிர்வாக இயக்குனர் கயூம் தனானி கூறும்போது, எங்கள் உணவகத்திற்காக உருவாக்கப்பட்ட மொபைல் செயலி மூலமாகவும் மற்றும் பிற உணவு ஆர்டர் செய்யும் செயலிகள் முலமாகவும் எங்கள் உணவு விநியோகங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. மேலும் நாங்கள் Barbeque-in-a-Box என்ற புதிய முறையை தற்போது கொண்டுவந்துள்ளோம். இதனால் இதுபோன்ற கொரோனா காலத்திலும் உணவு விநியோகத்தை இது வேகப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here