வண்ட வண்டையாக பேசி பாக்கியாவை சந்திசிரிக்க வைத்த கோபி – சப்போர்ட் செய்த ராதிகா! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகரும் பாக்கியலட்சுமி சீரியலில் எல்லா உண்மையையும் போட்டு உடைத்த கோபி இறுதியாக என் கூட வாழ ஆசையா? இல்லையா? பதில மட்டும் சொல்லுன்னு சொல்லி கட்டாயப்படுத்தினார். அதுக்கு ராதிகாவும் இருக்கு கோபி, உங்க கூட வாழணும்னு ரொம்பவே ஆசை இருக்கு. ஆனா டீச்சருக்கு என்னால துரோகம் பண்ண மனசு ஒத்துக்க மாட்டேங்குது கோபின்னு கண் கலங்குகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி மனசில் உள்ள ஆசை எல்லாத்தையும் கோபி கிட்ட ஓபன் பண்ண ராதிகா இறுதியில் இதுக்கெல்லாம் எனக்கு டைம் வேணும் அதுவரைக்கும் என்ன தொந்தரவு பண்ணாதீங்கன்னு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இதனால் ஆத்திரமான கோபி, இரு ராதிகா கடைசியா ஒன்னு சொல்லுறேன். அதையும் கேட்டுட்டு மொத்தமா போ என சொல்ல, அவரும் நின்றார். அப்போ கோபி வாழ்க்கைன்னு ஒன்னு இருந்தா அது உன் கூட மட்டும் தான். அப்படி நீ இல்லாத வாழ்க்கையை நீ வாழ சொன்னா..அந்த உசுரே எனக்கு வேண்டாம்.

அதையும் மீறி நான் வாழ்ந்தாலும் அது என் பொண்ணு இனியாவுக்காக மட்டும் தான் இருக்கும். இப்படி கடைசி காலம் வர தனியாவே வாழ்ந்துப்பேன்னு புயல் ஓய்ந்து நின்னது போல பேசி முடிக்கிறார். போன ராதிகா திரும்பி வந்து இப்படி சாகுறேன் அப்படிலாம் பேசாதீங்க கோபி. உங்க கூட வாழ்ந்த அந்த ராதிகாவுக்கும், இப்போ உங்க முன்னாடி நிக்கிற ராதிகாவுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு. எனக்கே அந்த ராதிகாவை தான் புடிச்சிருக்கு. நம்பிக்கையா இருங்க கோபி எல்லாமே நல்லதா நடக்கும் என சொல்லி கிளம்பினார்.

அதன் பிறகு பாக்கியாவுக்கு போன் செய்த கோபி அதட்டல் குரலுடன் நான் யார் பேசுறேன்னு தெரியுதா மிஸ் பாக்கியா என பேச்சை தொடங்கியவர், உன்னோட முன்னாள் கணவர் கோபி பேசுறேன். உனக்கெல்லாம் என் பிள்ளை இனியாவுக்கு பீஸ் கட்ட வக்கில்லை. நீ எல்லாம் என்கிட்ட சபதம் போடுறியா? இங்க பாரு ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ உன்னோட வீண் ஈகோவால என் குடும்பத்தையும், முக்கியமா என் இனியாவை கஷ்டப்படுத்தனு நினைச்ச அத பாத்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன். நீயெல்லாம் ஒரு ஒட்டுண்ணி அடுத்தவங்களை சார்ந்தே வாழுற ஜென்மோ அப்டினு விட்டு விளாசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here